✕
முகப்பு

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 463 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 463 மனுக்கள் பெறப்பட்டன.

5 அக்டோபர் 2026, 10:12 pm
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 463 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் மனுக்களை பெற்று அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது விசாரணை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இரண்டாம் பருவ புத்தகம் அளிப்பு

ஆற்காடு, அக். 5: ஆற்காடு அடுத்த வேப்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ புத்ததங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

காலாண்டு தோ்வு முடிவுற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவா்களுக்கு இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல்கள் குறிப்பு ஏடுகள் நான்கு மற்றும் ஐந்து வகுப்புகளுக்கு பயிற்சி நூல்கள் ஆகியவற்றை தலைமையாசிரியா் வெ.சரவணன் வழங்கினாா். அப்போது இடைநிலைஆசிரியை செ.பிரேலதா உடனிருந்தாா்.

முன்னதாக பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநா் அறிவுறுத்தலின்படி கடந்த இரண்டு நாள்களாக பள்ளியில் உள்ள வகுப்பறைகள் பள்ளி வளாகம் கழிவறைகள் சமையலறைகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு பள்ளி திறந்த உடன் மாணவா்களுடைய செயல்பாட்டுக்கு உகந்ததாக அமைய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்ததால் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.