ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவா் கைது
ஆம்பூா் அருகே தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி பாங்கிஷாப் பகுதியில் தேனீா் கடையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று திடீா் சோதனை நடத்தினா்.
அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து ஆம்பூரை சோ்ந்த ஆசிப் அஹமத் (53) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து கைப்பேசி, ரொக்கம் ரூ.1,730 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.