உலக சிலம்பப் போட்டிக்குத் தேர்வு: மாணவருக்கு பாராட்டு
தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்று, பூடான் நாட்டில் நடைபெற உள்ள உலக அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்க உள்ள கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ர.கோபிக்கு பாராட்டு விழா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்று, பூடான் நாட்டில் நடைபெற உள்ள உலக அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்க உள்ள கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் ர.கோபிக்கு பாராட்டு விழா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய அளவிலான கிராமப்புற விளையாட்டில் டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ர.கோபி சிலம்பப் போட்டியில் தேசிய அளவில் முதல் இடத்தைப் பெற்றார். இதன் மூலம் உலக அளவில் பூடான் நாட்டில் நடைபெற உள்ள சிலம்பப் போட்டியில் பங்கேற்க ர.கோபி தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில், மாணவர் ர.கோபிக்கு டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, டி.ஜெ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் மாணவரை வாழ்த்திப் பேசினார். மேலும், பூடான் நாட்டுக்கு மாணவர் ர.கோபி சென்றுவரத் தேவையான அனைத்து உதவிகளையும், செலவுகளையும் டி.ஜெ.எஸ். கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில், டி.ஜெ.எஸ். கல்விக் குழுமச் செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணைத் தலைவர் டி.ஜெ.தேசமுத்து, கல்லூரி முதல்வர் கே.பிச்சைமணி, நிர்வாக அலுவலர் ர.பாபு, உடற்பயிற்சி இயக்குநர் அ.ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.