தாட்கோ திட்டங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்தார்.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், மகளிர் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்படுத்துதல் (இருபாலருக்கும்), தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 55 வரை. குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ரூ.1 லட்சம்.
Advertisement
Advertisement
வாகனத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர் (ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.) பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைக்க வயது வரம்பு 18 முதல் 55 வரை, குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் இருக்க வேண்டும்.
இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு வயது வரம்பு 18 முதல் 35 வரை, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாகும். வாகனத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர் (ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.) மருத்துவமனை, மருந்துக் கடை, கண் கண்ணாடியகம், முட நீக்க மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைக்க எம்பிபிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிடிஎஸ், பிபிடி, டிபாம், லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்களுக்கு மருத்துவமனை அமைக்கும் திட்டத்துக்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம். இதற்கு அரசு அங்கீகார நிறுவனத்தில் உரிய பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடன் உதவி பெற வயது வரம்பு 18 முதல் 60 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சம். கலப்புக் குழுக்களுக்கான சுழல்நிதி (ஆண், பெண் இருபாலரும்), கலப்புக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி (ஆண், பெண் இருபாலரும்) பெற வயது வரம்பு 18 முதல் 60 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சம்.
ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி, ஆண்கள் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி பெற, வயது வரம்பு 18 முதல் 60 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சம். திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி, திருநங்கைகள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி பெற, வயது வரம்பு 18 முதல் 60 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சம்.
மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி, மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி பெற, வயது வரம்பு 18 முதல் 60 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 2 லட்சமாகும். மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதித் திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள, 40 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், பெற்றோர், பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்துக்கு வயது வரம்பு இல்லை.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இணைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம், மேலும் விவரங்களையும் அறிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.