மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு
திருவேற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து வட மாநில சிறுவன் உயிரிழந்தார்.
திருவேற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து வட மாநில சிறுவன் உயிரிழந்தார்.
திருவேற்காட்டை அடுத்த ராஜங்குப்பத்தில் தொழிற்சாலை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
இதில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சமண் பாண்டா (35), அவரது மனைவி புத்திரி பாண்டா ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தங்கள் மகன் சங்கர் பாண்டாவுடன் (6) கட்டடப் பணி நடைபெறும் இடத்தின் அருகே குடிசை அமைத்து தங்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு குடிசையில் சென்ற மின் கம்பியை சிறுவன் சங்கர் பாண்டா தொட்டுள்ளார்.
அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.