FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் சிலையை அகற்றியதை கண்டித்து, குன்றத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 90 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

அம்பேத்கர் சிலையை அகற்றியதை கண்டித்து, குன்றத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 90 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்துக்குச் செல்லும் பொதுவழியில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி அம்பேத்கர் சிலையை அமைத்தனர். இதனால், அந்தச் சிலையை அமைத்த 5 பேரை குன்றத்தூர் போலீஸார் கைது செய்தனர். மேலும், அந்தச் சிலையை வருவாய்த் துறையினரும், போலீஸாரும் இணைந்து அகற்றினர்.

இதை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் பரணி மேகா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Advertisement

Advertisement

இதில், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் விடுதலை செழியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 90 பேரை குன்றத்தூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர், மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments