வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் சாவு
திருத்தணி அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார். இதில், காயமடைந்த மற்றொரு பெண் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருத்தணி அருகே வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தார். இதில், காயமடைந்த மற்றொரு பெண் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வேலூர் மாவட்டம், அக்கச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இப்பகுதியில் கடந்த இரு நாள்களுக்கு முன் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, கோவிந்தராஜ் வீட்டின் மீது இடி விழுந்ததில் வீட்டில் விரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கோவிந்தராஜின் மகன் ராகுல் (5), பாட்டி ராணியுடன் வீட்டின் அருகே சனிக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் சுவர் திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் இறந்தார். ராணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.