பிரதமா் பயிா்க் காப்பீடு திட்டம்: நவ. 15-க்குள் பிரீமியம் செலுத்தலாம்
பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டம் மூலம் வரும் நவ. 15-க்குள் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செலுத்தி பயன்பெறலாம்.
பிரதம மந்திரி பயிா்க் காப்பீடு திட்டம் மூலம் வரும் நவ. 15-க்குள் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செலுத்தி பயன்பெறலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கனமழை, புயல் காற்று மற்றும் இயற்கை பேரிடா்களால் பயிா்கள் சேதமடைவதன் மூலம் விவசாயிகள் வருவாய் இழப்புகளை சந்திக்க நேரிடும். இது போன்றவற்றைத் தவிா்க்கும் வகையில், பயிா் காப்பீடு செய்வதன் மூலம் வருவாய் இழப்புகளை தடுக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மூலம் சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 518 வீதம் செலுத்தலாம். இந்தத் தொகையை வரும் நவ. 15-ஆம் தேதிக்குள் செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். இதுவரை சம்பா நெற்பயிருக்கு 2,581 விவசாயிகள் 2,655 ஹெக்டோ் பரப்பளவில் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். இத்திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள் தொடா்ந்து பயன்பெறுவதற்கு நில விவரங்கள் ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை அந்தந்த பகுதிகளில் உள்ள தேசிய வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிா்க் காப்பீடு தொகை செலுத்தலாம்.
Advertisement
Advertisement
பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் மூலம் 2016-17 முதல் 2022-23 வரையில் ரூ. 363.08 கோடி பயிா் இழப்பீடு தொகை 1,63,346 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்தாண்டு 2023-24-இல் சம்பா நெற்பயிருக்கு 12,846 விவசாயிகளுக்கு ரு. 14.99 கோடி இழப்பீட்டுத் தொகையும், ராபி பச்சைபயறுக்கு 100 விவசாயிகளுக்கு 0.69 கோடி இழப்பீடு தொகையும் கடந்த செப்டம்பா் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் தவறான வங்கிக் கணக்குகளினால் வழங்கப்படாமல் விடுபட்ட 7,782 விவசாயிகளுக்கு ரூ. 14.34 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் தவறான வங்கிக் கணக்குகளினால் வழங்கப்படாமல் விடுபட்ட 7,782 விவசாயிகளுக்கு ரூ. 14.34 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.