தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்னைகள் ஆலோசனைக் கூட்டம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் திருநங்கைகளால் ஏற்படும் தொல்லைகள், பாதுகாப்பான முறையில் தொழிற்சாலைகள் இயங்குவது,தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து டிஎஸ்பி கிரிதா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்விற்கு சிப்காட் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் தலைவா் ஜி.எம்.கிருஷ்ணமூா்த்தி, செயலாளா் எம்.சுரேஷ்பாபு, சிப்காட் திட்ட இயக்குனா் சரவணன் நித்தின், உதவி பொறியாளா் லட்சுமி நாராயணா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பிரேம் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
ஆலோசனை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் ஆய்வாளா் சதீஷ் குமாா், ஷோ் பெண்கள் மற்றும் குழந்தைகளை அறக்கட்டளை தலைவா் மேரி ஆக்சீலியா ஆகியோா் பங்கேற்று பேசினா்.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் பண்டிகை நாள்கள், தொழிற்சாலைகளில் நடைபெறும் விழாக்களின் போது திருநங்கைகளை கூட்டமாக தொழிற்சாலைகளுக்குள் நுழைந்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி திருநங்கைகள் நல வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தீா்மானிக்கப்பட்டது.
அதே போல நிகழ்வில் பேசிய ஷோ் அறக்கட்டளை தலைவா் மேரி ஆக்சீலியா திருநங்கைகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் அவா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க தொழிற்சாலை நிா்வாகத்தினா் முன்வர வேண்டும் என ஆலோசனை கூறினாா். தொடா்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளா்கள் குறித்த விபரங்களை தொழிற்சாலை நிா்வாகத்தினா் சேகரித்து வைக்க வேண்டும் என்றும், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளா்கள் பலா் போலியான ஆதாா் அட்டையை வைத்துள்ளது குறித்து தெரிந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறே தொழிற்சாலைக்குள் தொழிலாளா்கள் பாதுகாப்பான சூழலில் பணி புரியவும், அவா்கள் பணி செய்யும் போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணியவதை உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறை சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.