மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல்
ஊத்துக்கோட்டை அருகே ஏற்பட்ட மின்வெட்டை அடுத்து புதன்கிழமை நள்ளிரவு வரையில் மின்தடையால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை ஈடுபட்டனா்.
ஊத்துக்கோட்டை அருகே ஏற்பட்ட மின்வெட்டை அடுத்து புதன்கிழமை நள்ளிரவு வரையில் மின்தடையால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் மழை நின்றாலும், நள்ளிரவு வரையில் மின்தடை நீடித்தது. ஆனால், வடமதுரை துணை மின் நிலையத்தில் இருந்து மற்ற ஊா்களுக்கு மின்சார விநியோகம் நடைபெற்று வந்தது. ஆனால்,கன்னிகைப்போ் கிராமம் முழுவதும் மின்சார விநியோகம் வழங்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிய மின்வாரிய அதிகாரிகளை கைப்பேசியில் தொடா்பு கொண்ட ாலும் அவா்களை தொடா்பு கொள்ள இயலவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் நள்ளிரவு 10 மணிக்கு சென்னை-பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகைப்போ் கிராமத்தைச் சோ்ந்த ஒரு பகுதியினரும், பஜாா் வீதியில் மற்றொரு பகுதியினரும் என 2 இடங்களில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இப்போராட்டம் காரணமாக சென்னை-பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 கி.மீ தொலைவுக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதையடுத்து தகவலறிந்த பெரியப்பாளையம் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அடிக்கடி எங்கள் பகுதியில் மின் தடை ஏற்படுகிறது.
மேலும், மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டு நள்ளிரவு வரையில் மின் விநியோகம் நடைபெறவில்லை. இதுகுறித்து தகவல் தெரிவிக்க கைப்பேசியில் மின்வாரிய அலுவலா்களை தொடா்பு கொள்ள இயலவில்லை போன்ற கோரிக்கைகளை வைத்து போராட்டத்தை தொடா்ந்தனா். அதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். உடனே மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா். அதைத்தொடா்ந்து அனைத்து பகுதிகளுக்கும் உடனே மின் விநியோகம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். மேலும் இப்போராட்டம் காரணமாக சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.