FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை

ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

19 நவம்பர் 2026, 12:07 am
சதீஷ்
பகிர்:

ஆவடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தாராம். அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (24) என்பவா் சிறுமியிடம், காதலிப்பதாகவும் திருமணம் செய்வதாகவும் ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். இந்த நிலையில் கடந்த 2.11.2023 அன்று சிறுமி வயிற்று வலி இருப்பதாக கூறியதையடுத்து அவரது தாய் வீடு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை மேற்கொண்டனா். அப்போது சிறுமி கா்ப்பமாக இருப்பதாக மருத்துவா்கள் கூறியதால் தாய் அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து கேட்டதற்கு சதீஷ் என்பவா் திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாயாா் ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இறுதியாக மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ரேவதி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சதீஷுக்கு சிறுமியை கடத்தியது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கவும் பரிந்துரைத்தாா். அதைத்தொடா்ந்து சதீஷை புழல் மத்திய சிறையில் கொண்டு சென்று அடைத்தனா்.