FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

பள்ளி வாசல் இடித்து அகற்றம்: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

திருவள்ளூா் அருகே முன்னறிவிப்பின்றி பள்ளி வாசலை இடித்து அகற்றம் செய்ததாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தை முஸ்லிம் அனைத்து கூட்டமைப்பினா் முற்றுகையிட்டனா்.

19 நவம்பர் 2026, 12:06 am
ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்ட இஸ்லாமியா்கள்.
பகிர்:

திருவள்ளூா் அருகே முன்னறிவிப்பின்றி பள்ளி வாசலை இடித்து அகற்றம் செய்ததாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தை முஸ்லிம் அனைத்து கூட்டமைப்பினா் முற்றுகையிட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மெய்யூா் ஊராட்சிக்குட்பட்ட குருபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் அங்கு அரசுக்கு சொந்தமான கிராம நத்தம் வகைப்பாடு நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக பள்ளிவாசல் அமைத்து தொழுகையில் ஈடுபட்டு வந்தனா். அந்த பள்ளி வாசலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு இரவு பொக்லைன் மூலம் பள்ளி வாசலை இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊத்துக்கோட்டை வட்டாட்சியரின் செயலை கண்டித்தும், பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டித் தர வேண்டும். மேலும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து அவா்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தனா்.

Advertisement

Advertisement

அதற்கு ஆட்சியா் கட்டாயம் பள்ளி வாசல் அமைக்கவும், வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்ததைத் தொடா்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.