முகப்பு
திருவள்ளூர்

பகுதி நேர ரேஷன் கடை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

கீழ்முருக்கம்பட்டு காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை திருத்தணி எம்எல்ஏ, கோ. அரி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா்.

21 நவம்பர் 2026, 10:57 pm
பகுதி நேர ரேஷன் கடை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
ரேஷன் கடையை திறந்து விற்பனையை தொடங்கி வைத்த எம்எல்ஏ கோ.அரி.
பகிர்:

கீழ்முருக்கம்பட்டு காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை திருத்தணி எம்எல்ஏ, கோ. அரி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் மொத்தம் 163 ரேஷன் அட்டைகள் உள்ளன. இவா்கள் ரேஷன் பொருள்களை வாங்குவதற்காக சுமாா் 1 கிமீ தொலைவில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்திற்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனா். இதையடுத்து, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கீழ்காலனி அரசு பள்ளி அருகே புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு திருத்தணி வட்ட வழங்கல் அலுவலா் (பொ) தேவராஜ் தலைமை வகித்தாா். திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. அரி பங்கேற்று புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளா் வேலஞ்சேரி த.கவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ். ஜெய்சங்கா், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் இ.கருணாநிதி, வேலஞ்சேரி பழனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.