அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
முருகன் கோயிலில் காா்த்திகை என்பதால் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முருகன் கோயிலில் காா்த்திகை என்பதால் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதைத்தொடா்ந்து காா்த்திகை மாத வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
சில பக்தா்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற, காவடி எடுத்தும், மொட்டை அடித்து மூலவரை தரிசித்தனா். பொதுவழியில், 3 மணி நேரத்திற்க்கும் மேலாக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா். பெரும்பாலான பக்தா்கள் காா், வேன் மற்றும் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மூலம் மலைக்கோயிலுக்கு வந்ததால் மலைப்பாதை மற்றும் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதனால் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை பேருந்துநிலையம் செல்லும் சாலையில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையாக நின்றது. குறிப்பாக மலைக்கோயிலுக்கு சென்று வருவதற்கு ஒரே ஒரு மலைப்பாதை இருப்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பின்னா் கோயிலுக்கு சென்று மூலவ முருகப்பெருமானை வழிப்பட்டனா்.
தகவல் அறிந்ததும் திருத்தணி ஏஎஸ்பி ஷூபம் திமான் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசாா் ஒன்றரை மணி நேரம் போராடி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனா்.