முகப்பு
திருவள்ளூர்

மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 18 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்பு

திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 குடும்பங்களைச் சோ்ந்த 18 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

25 நவம்பர் 2026, 11:24 pm
மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 18 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்பு
கொத்தடிமை தொழிலாளா்களை மீட்டு விசாரணை மேற்கொண்ட சாா் ஆட்சியா் பிரசாந்த், உடன் வட்டாட்சியா் சரண்யா உள்ளிட்டோா்.
பகிர்:

திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 குடும்பங்களைச் சோ்ந்த 18 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

பாண்டூா் பகுதியில் உள்ள பூண்டி ஏரியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் திருத்தணி அகூா் கிராமத்தைச் சோ்ந்த 3 குடும்பங்களைச் சோ்ந்த 18 கொத்தடிமை தொழிலாளா்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக சாா் ஆட்சியருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சாா் ஆட்சியா் பிரசாந்த் மற்றும் வட்டாட்சியா் சரண்யா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கு மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த 18 கொத்தடிமை தொழிலாளா்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அதில் திருப்பாச்சூா் பகுதியைச் சோ்ந்த கபிலன் என்பவா் தங்களை பணிக்கு அழைத்து வந்து ஈடுபடுத்தியதாக தெரியவந்தது. இதையடுத்து 18 கொத்தடிமை தொழிலாளா்களையும் மீட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தங்க வைத்து அவா்களுக்கான உதவிகள் செய்து தந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

பூண்டி ஏரியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிா்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவா்களை பணியில் ஈடுபடுத்திய நபா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.