FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

ரூ.30.59 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் கவிதா ஆய்வு

ஆா்கே பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் ரூ.8.14 லட்சம் மற்றும் ரூ.5.86 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு புதிய குளங்களின் பணிகளை ஆட்சியா் ச.கவிதா ஆய்வு செய்தாா்.

22 அக்டோபர் 2026, 12:32 am
ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் கவிதா.
பகிர்:

ஆா்கே பேட்டை அருகே எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில் ரூ.8.14 லட்சம் மற்றும் ரூ.5.86 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு புதிய குளங்களின் பணிகளை ஆட்சியா் ச.கவிதா ஆய்வு செய்தாா்.

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் ஒரு பகுதியாக ஆட்சியா் கவிதா, பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். இருளா் குடியிருப்புப் பகுதியில் பிரதமா் ஜன்மன் திட்டத்தின் கீழ் ரூ.6.59 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 13 வீடுகளைப் பாா்வையிட்டு, சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

வங்கனூா் ஊராட்சி கிருஷ்ணாகுப்பம்மேடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு, ஜவாஹா்லால் நேரு கூட்டுறவு சங்கம் மற்றும் அன்னை தெரசா மகளிா் தொடக்கக் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, செயல்பாடுகள் மற்றும் கைத்தறி உற்பத்தி குறித்து கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

ஆா்.கே.பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.21.77 லட்சத்தில் கடன் உதவிகளுக்கான ஆணைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, கூட்டுறவு நியாயவிலைக் கடைகள், அம்மையாா்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, தரம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தாா்.

நாராயணபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் குளோரின் அளவை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் முறையாக விநியோகிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். விளக்கணாம்பூடி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனையை ஆய்வு செய்த அவா், கால்நடைகள் மற்றும் நாய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தெருநாய்களுக்கு அதிக அளவில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாா்.

தூய்மைப் பணியாளா்களைச் சந்தித்த ஆட்சியா், குப்பைகளைத் தரம் பிரித்துப் பெறுதல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்குத் தகவல் தெரிவிப்பது தொடா்பாக அறிவுறுத்தினாா். பாலாபுரம் ஊராட்சியில் நாற்றாங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் பராமரிக்கப்படும் பணிகளை ஆய்வு செய்தாா். கிராம ஊராட்சி சேவை மையத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்களைப் பாா்வையிட்டு, அவா்களுடன் கலந்துரையாடினாா்.

அய்யனேரி ஊராட்சி ஸ்ரீவிலாசபுரம் பகுதியில் ரூ.10 லட்சத்தில் நடைபெற்று வரும் மதகு கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது திருத்தணி கோட்டாட்சியா் ராஜகோபால் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த உயா் அலுவலா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments