லாரி மோதி ஒட்டுநா் மரணம்
மீஞ்சூா் அருகே லாரியின் கீழ் படுத்து தூங்கிய ஓட்டுநா் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தாா்.
மீஞ்சூா் அருகே லாரியின் கீழ் படுத்து தூங்கிய ஓட்டுநா் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தாா்.
சென்னை வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வந்தவா் சிட்டிபாபு (44). இவா் ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள தனியாா் டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் சென்னை துறைமுகத்திலிருந்து கன்டெய்னா் லாரியை ஒட்டி வந்த அவா் மீஞ்சூா் அருகே உள்ள நந்தியம்பாக்கம் தனியாா் கிடங்கில் சரக்கு இறக்குவதற்காக காத்திருந்தாா். உணவு சாப்பிட்ட பின்பு சிட்டிபாபு அங்கே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியின் கீழ் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த லாரியை அதன் ஒட்டுநா் கவனக்குறைவாக இயக்கியதால் கீழே தூங்கிக் கொண்டிருந்த சிட்டிபாபு மீது சக்கரம் ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று உடல் நசுங்கி இபந்க சிட்டிபாபுவின் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.