FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாற்றுத் திறனாளிகளின் மனுக்கள்: ஆட்சியர் உடனடி நடவடிக்கை

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் அ.ஞானசேகரன், கூட்டம் முடிவதற்குள் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் அ.ஞானசேகரன், கூட்டம் முடிவதற்குள் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் அ.ஞானசேகரன் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 546 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

உடனடி நடவடிக்கை

குறைதீர் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர் அ.ஞானசேகரன், 2 பேருக்கு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு காதொலி கருவி, ஒருவருக்கு ஊன்றுகோல் ஆகியவற்றை குறைதீர் கூட்டம் முடிவதற்குள் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, வட்டாட்சியர்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள், அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments