வைக்கோல் ஏற்றிய லாரியில் தீ
திருவண்ணாமலை அருகே வைக்கோல் ஏற்றிய லாரியில் தீப்பிடித்ததில் வைக்கோல்கள் எரிந்து நாசமாகின.
திருவண்ணாமலை அருகே வைக்கோல் ஏற்றிய லாரியில் தீப்பிடித்ததில் வைக்கோல்கள் எரிந்து நாசமாகின.
செஞ்சியில் இருந்து தருமபுரிக்கு வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் புதிய புறவழிச் சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென வைக்கோல் லாரி தீப் பிடித்து எரியத் தொடங்கியது. அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் லாரியில் ஏற்றி வரப்பட்ட 90 சதவீத வைக்கோல் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவண்ணாமலை வட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.