FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அகரம்பள்ளிப்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணி வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அகரம்பள்ளிப்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணி வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலைத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஒன்றிய பணிமேற்பார்வையாளர் அகரம்பள்ளிப்பட்டிலுள்ள ஏரிக்கரையில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களை சரிபார்க்கச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது பணியில் இருந்தவர்கள் குறித்து வருகைப் பதிவு செய்ததில் 80 பேர் மட்டுமே பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றவர்களின் விவரங்கள் தெரியவராததால் வருகைப் பதிவேட்டை பணி மேற்பார்வையாளர் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை 100 நாள் வேலைத் திட்டப் பணிக்குச் சென்றவர்களில், வெள்ளிக்கிழமை வருகைப் பதிவேட்டின்படி, பணியில் இருந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வேலை இல்லை எனக்கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

மேலும் அரசுப் பேருந்து ஒன்றையும் சிறைப்பிடித்தனர். அப்போது 100 நாள் வேலைத் திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், குறைவாக வழங்கப்படும் கூலியை உயர்த்தித் தர வேண்டும், விடுமுறை நாள்கள் அதிகம் உள்ளதால் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை அதிக நாள்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தகவலறிந்து வந்த வானாபுரம் காவல் துறையினர், வருவாய் ஆய்வாளர் அப்துல் ரகூப், ஊராட்சி மன்றத் தலைவர் பானுமதி ரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில், சமரசம் ஏற்பட்டதையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments