கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம்
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எம்.ஓ.எச்.முகமது யாகூப் கருத்தரங்க மலரை வெளியிட்டார். இலங்கை ஜப்னா பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியர் திருநாவுக்கரசு கருணாகரன், திருச்சி ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் முகம்மது அலி ஜின்னா, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் கே.ராஜாராமன், எ.செல்வராஜ், எஸ்.கார்த்திக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கல்லூரிச் செயலர் எம்.ரமணன், கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் சுகுணா, பேராசிரியைகள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.