FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிவன் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

திருவண்ணாமலையை அடுத்த வடமாத்தூர் மதுரநாதீஸ்வரர் சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு, ஆன்மிகச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருவண்ணாமலையை அடுத்த வடமாத்தூர் மதுரநாதீஸ்வரர் சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு, ஆன்மிகச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் விஜயகுமார், நிலக்கிழார் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.

 திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் பங்கேற்று அப்பரின் அற்புதத் திருப்பதிகங்கள் என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார் . தொடர்ந்து, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஐங்குணம் ராஜாராம் சைவத்தின் பெருமை என்ற தலைப்பிலும், வேட்டவலம் திருமுறைக் கழகத் தலைவர் தங்க.விசுவநாதன் பிரதோஷ மகிமை என்ற தலைப்பிலும் பேசினர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments