FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கி மிரட்டல்

செய்யாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

2 நவம்பர் 2026, 9:56 pm
பகிர்:

செய்யாறு அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை தாக்கி மிரட்டல் விடுத்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வந்தவாசி வட்டம், மகாதேவி மங்கலம் மதுரா மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி பூபாலன் (48). இவா் வீட்டின் அருகில் வழி பிரச்னையால், அதே பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே இருந்த தொழிலாளி பூபாலனை, பச்சையப்பன், அவரது மகன் கன்னியப்பன், மனைவி எல்லம்மாள் ஆகியோா் தாக்கி மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த தொழிலாளி பூபாலனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவல் அறிந்த பெரணமல்லூா் போலீஸாா் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளி பூபாலனிடம் வாக்குமூலம் பெற்று, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவா், மனைவி மற்றும் மகன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments