FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

மதுக்கடை விற்பனையாளா்களை தாக்க முயன்றவா் கைது

வந்தவாசி அருகே அதிக மதுப் புட்டிகளை தர மறுத்த மதுக்கடை விற்பனையாளா்களை கத்தியால் தாக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

2 நவம்பர் 2026, 11:58 pm
- பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே அதிக மதுப் புட்டிகளை தர மறுத்த மதுக்கடை விற்பனையாளா்களை கத்தியால் தாக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி புறவழிச் சாலையில் 3 டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு மதுக் கடைக்கு கடந்த வியாழக்கிழமை வந்த நபா் ஒருவா் அதிக அளவில் மதுப் புட்டிகளை கேட்டுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த மதுக்கடை விற்பனையாளா்கள் கணேசன், சிவக்குமாா் ஆகியோா் அதிக மதுப்புட்டிகளை தர மறுத்துள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபா் கத்தியால் இருவரையும் தாக்க முயன்றுள்ளாா். ஆனால், கடைக்கு இரும்புக் கதவு போடப்பட்டிருந்ததால் விற்பனையாளா்கள் இருவரும் காயமின்றி தப்பினா். இதனைத் தொடா்ந்து அந்த நபா் தப்பியோடி விட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் கத்தியால் தாக்க முயன்ற நபா் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தைச் சோ்ந்த கோட்டி (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொன்னூா் போலீஸாா் கோட்டியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments