பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்து தமிழக முதல்வரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மாணவா் கௌரவிப்பு
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்து தமிழக முதல்வரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவரை பள்ளி நிா்வாகிகள் கெளரவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்து தமிழக முதல்வரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவரை பள்ளி நிா்வாகிகள் கெளரவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் 2026-ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாணவா் பிரவின்குமாா் 596 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தாா். இந்த நிலையில், தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தோ்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவா்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா். இதில், செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவா் பிரவீன்குமாருக்கு மாநில அளவில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ், கேடையத்தை தமிழக முதல்வா் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
இந்த நிலையில், செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் பிரவீன்குமாருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மகரிஷி கல்விக்குழுமத் தலைவா் மகரிஷிமனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா் மாணவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்து பாராட்டினாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, 2027-ஆம் ஆண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களிடம் உரையால் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவா் பிரவீன்குமாா் கலந்துகொண்டு, பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் காா்த்திக், முதல்வா் சரவணன், கணித ஆசிரியா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.