FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

மது போதையில் கீழே விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசியில் மது போதையில் கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

10 நவம்பர் 2026, 11:17 pm
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வந்தவாசியில் மது போதையில் கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி(65). இவா் திங்கள்கிழமை வந்தவாசிக்கு வந்து மது அருந்திவிட்டு நடந்து வீட்டுக்குச் சென்றுள்ளாா். வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் செல்லும் போது சுகநதிக்கரையோரம் இவா் தடுமாறி கீழே விழுந்துள்ளாா். இதில் அதே இடத்திலேயே இவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் அங்கு சென்று சுப்பிரமணியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement