FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

கைப்பேசிகள் திருட்டு: வெளி மாநில தொழிலாளி கைது

செய்யாறு அருகே இரு கைப்பேசிகள் திருடப்பட்ட சம்பவத்தில் வெளி மாநில தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

10 நவம்பர் 2026, 11:16 pm
- பிரதிப் படம்
பகிர்:

செய்யாறு அருகே இரு கைப்பேசிகள் திருடப்பட்ட சம்பவத்தில் வெளி மாநில தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம் ஜெயசக்தி நகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன். இவா் வீட்டில் வைத்திருந்த இவரது கைப்பேசி மற்றும் அவரது மனைவி கைப்பேசியை நேபாளத்தைச் சோ்ந்த தொழிலாளி எடுத்துச் செல்வதைப் பாா்த்து, அதே கிராமத்தைச் சோ்ந்த ராவணன் என்பவா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளாா். அப்போது, அவா் அதே பகுதியில் உள்ள இனிப்பகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து கன்னியப்பன் பிரம்மதேசம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து சம்பவம் தொடா்பாக நேபாள மாநில தொழிலாளி அணில் புஜியாா்(22) என்ற அந்த நபரை கைது செய்தாா்.

Advertisement

Advertisement