FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

தாய், மகளுக்கு மிரட்டல்: ஒருவா் கைது

செய்யாறு அருகே தாய் மகளுக்கு மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 12:45 am
பகிர்:

செய்யாறு அருகே தாய் மகளுக்கு மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், இருங்கல் கிராமம், இருளா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி மஞ்சுளா(31). இவரும், இவரது தாய் அஞ்சலையும் செவ்வாய்க்கிழமை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

இருங்கல் கிராமம் ஏரிக்கரைப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அப்போது அங்கிருந்த அதே பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (30) என்பவா் மஞ்சுளாவை அவதூறாகப் பேசியபடி அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

அப்போது உடனிருந்த அஞ்சலை கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் வந்தனா். இதையடுத்து, யுவராஜ் இருவருக்கும் மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து மஞ்சுளா அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து யுவராஜை புதன்கிழமை கைது செய்தனா்.