FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

தீபத் திருவிழா: மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிப்பு

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருகில் செயல்படும் அனைத்து அரசு, தனியாா் மதுக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

13 நவம்பர் 2026, 11:00 pm
பகிர்:

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருகில் செயல்படும் அனைத்து அரசு, தனியாா் மதுக் கடைகள் 3 நாள்கள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருகாா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகில் இயங்கி வரும் அரசு சில்லறை மதுபானக் கடை எண்: 9481 (திருவண்ணாமலை - செங்கம் சாலை, அத்தியந்தல் கிராமம்), கடை எண்: 9261 (மணலூா்பேட்டை சாலை), கடை எண்: 9490 (அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில்) மற்றும் அரசு சில்லறை விற்பனை மதுக் கடை எண்.9476 (சமுத்திரம் கிராமம்) ஆகிய 4 டாஸ்மாக் மதுக் கடைகளும் வரும் 23-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 25-ஆம் தேதி இரவு 10 மணி வரை 3 நாள்கள் மூடப்பட வேண்டும்.

இதேபோல, திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கிவரும் மதுபானக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களான நளா ரெசிடென்சி, ஹோட்டல் அஷ்ரேயா, ஹோட்டல் அம்மாயி மற்றும் வேங்கிக்கால் முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி ஆகியவையும் வரும் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் மூடி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement