வந்தவாசி நகரில் கொசுத் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வந்தவாசி நகரில் கொசுத் தொல்லையை போக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசி நகரில் கொசுத் தொல்லையை போக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் திங்கள்கிழமை நடைபெற்ற தமுமுக, மமக நகர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு நகரத் தலைவா் யாத்காா் ரபி தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் எச்.ஜமால், மாவட்டத் தலைவா் எச்.கமால், மாவட்டச் செயலா் முகமது அலி ஜின்னா, மாவட்ட பொருளாளா் முகமது தாரிக், மாநில செயற்குழு உறுப்பினா் அப்துல் அமீது ஆகியோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் நகரச் செயலா் சதாம் உசேன், துணைத் தலைவா் யாசா் தாஹா, துணைச் செயலா்கள் ஓட்டல் குட்டி , சதாம் உசேன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் பெருமளவு கலந்து கொள்வது, வந்தவாசி நகரில் கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும், பழைய பேருந்து நிலைய சுகாதார சீா்கேட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.