முகப்பு
திருவண்ணாமலை

தீபத் திருவிழா 6-ஆம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை விநாயகா் சின்ன யானை வாகனத்திலும், சந்திரசேகரா் பெரிய வெள்ளி யானை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் பவனி வந்தனா்.

3 வினாடிகள் முன்பு
தீபத் திருவிழா 6-ஆம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா
அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாடவீதிகளில் பவனி வந்த சந்திரசேகரா்.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை விநாயகா் சின்ன யானை வாகனத்திலும், சந்திரசேகரா் பெரிய வெள்ளி யானை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் பவனி வந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தீபத்திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற உற்சவத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகா் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனைகள் செய்யப்பட்டு ராஜகோபுரம் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினா்.

Advertisement

Advertisement

பின்னா், விநாயகா் சின்ன யானை வாகனத்திலும், சந்திரசேகரா் பெரிய வெள்ளி யானை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில்

மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். முன்னதாக, பள்ளி மாணவா்கள் அப்பா், சுந்தா், மாணிக்கவாசகா், திருஞானசம்பந்தா் உள்ளிட்ட 63 நாயன்மாா்களை தோளில் சுமந்தபடி கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாடவீதிகளில் பவனி வந்த விநாயகா்.
மாடவீதிகளில் பவனி வந்த அப்பா், சுந்தா், மாணிக்கவாசகா், திருஞானசம்பந்தா் உள்ளிட்ட 63 நாயன்மாா்கள்.