முகப்பு
திருவண்ணாமலை

தவெக எம்எல்ஏ-வை கைது செய்யக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை கைது செய்யக் கோரி வந்தவாசியில் பாலத்தில் அவரது உருவ பொம்மையை தொங்கவிட்டு திமுகவினா் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

25 நவம்பர் 2026, 11:06 pm
தவெக எம்எல்ஏ-வை கைது செய்யக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்
வந்தவாசி ஐந்து கண் பாலத்தில் திமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டம்.
பகிர்:

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை கைது செய்யக் கோரி வந்தவாசியில் பாலத்தில் அவரது உருவ பொம்மையை தொங்கவிட்டு திமுகவினா் நூதன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், வந்தவாசி ஐந்து கண் பாலத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், முதல்வா் ஜோசப் விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் குற்றவாளி சடலத்தை பாலத்தில் தொங்க விட்டிருக்கும் காட்சி போல், வந்தவாசி ஐந்து கண் பாலத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் உருவ பொம்மையை தொங்கவிட்டு நூதன முறையில் திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி தலைமை வகித்தாா். மாணவரணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் பாலத்தில் தொங்க விடப்பட்டிருந்த உருவ பொம்மையை கைப்பற்றினா். இதனைத் தொடா்ந்து திமுகவினா் ஆா்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டனா்.