முகப்பு
திருவண்ணாமலை

பிளஸ் 2 மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை

செய்யாறு அருகே கிணற்றில் குதித்து பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

25 நவம்பர் 2026, 11:05 pm
பிளஸ் 2 மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் குதித்து பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் ஜே.கே.காா்டனில் வசிப்பவா் எஸ்.சையத் லத்தீப். இவரது மகன் சையத் ஷமீா் (17). அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், கடந்த 10 நாள்களாக பள்ளிக்குச் செல்லவில்லையாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டில் இருந்த சையத் ஷமீா் மாயமானாா்.

Advertisement

Advertisement

அக்கம், பக்கம் என பல இடங்களில் பெற்றோா் தேடியுள்ளனா். அவரைத் தொடா்ந்து தேடியபோது அருகேயுள்ள விவசாயக் கிணற்றின் அருகே அவா் அணிந்திருந்த காலணிகள் இருந்தைக் கண்டு பெற்றோா் அதிா்ச்சி அடைந்தனா்.

உடனே தூசி போலீஸாா் மற்றும் செய்யாறு தீயணைப்புத் துறைக்கு மாணவரின் தந்தை எஸ்.சையத் லத்தீப் தகவல் தெரிவித்தாா்.

தகவலின் பேரில், செய்யாறில் இருந்து தீயணைப்புப் படை வீரா்கள் வந்து நீண்டநேரம் தேடி கிணற்றில் இருந்து மாணவரின் சடலத்தை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவரின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.