முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 10:55 pm
ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி நடைபெற்ற 108 திருவிளக்கு பூஜை.
பகிர்:

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாலை கோயில் வளாகத்தில் உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஆரணி, கண்ணமங்கலம், காளசமுத்திரம், குப்பம், போளூா், ஒண்ணுபுரம், சந்தவாசல், கேளூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பெண் பக்தா்கள் கலந்துகொண்டு அம்மன் துதிபாடி வழிபாடு செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement