முகப்பு
திருவண்ணாமலை

ஆா்ப்பாட்டம் நடத்திய திமுகவினா் 14 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை கைது செய்யக் கோரி வந்தவாசியில் ஆா்ப்பாட்டம் நடத்திய திமுகவினா் 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

6 வினாடிகள் முன்பு
ஆா்ப்பாட்டம் நடத்திய திமுகவினா் 14 போ் மீது வழக்கு
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை கைது செய்யக் கோரி வந்தவாசியில் ஆா்ப்பாட்டம் நடத்திய திமுகவினா் 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் வந்தவாசி ஐந்து கண் பாலத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், பாலத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் உருவ பொம்மையை தொங்கவிட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி உள்ளிட்ட 14 போ் மீது வந்தவாசி தெற்கு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.