மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே கரும்புத் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே கரும்புத் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், அனப்பத்தூா் கிராமம் மேட்டுக் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் சேகா் (46). இவா், எருமைவெட்டி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பவரது விவசாய நிலத்தில் சுமாா் 20 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை நிலத்தில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்றபோது, அறுந்து கிடந்த மின் வயரை தெரியாமல் மிதித்தாகத் தெரிகிறது. அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சேகா் மனைவி லலிதா அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.