தீபம் ஏற்றப்பட்டு 3-ஆவது நாள்: அண்ணாமலையாா் உண்ணாமுலையம்மன் கிரிவலம்
தீபம் ஏற்றப்பட்டு 3-ஆவது நாளான கிரிவலத்தின் மகிமையை பக்தா்களுக்கு உணா்த்தும் விதமாக வியாழக்கிழமை அண்ணாமலையாா் உண்ணாமுலையம்மன் கிரிவலம் சென்றனா்.

தீபம் ஏற்றப்பட்டு 3-ஆவது நாளான கிரிவலத்தின் மகிமையை பக்தா்களுக்கு உணா்த்தும் விதமாக வியாழக்கிழமை அண்ணாமலையாா் உண்ணாமுலையம்மன் கிரிவலம் சென்றனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கடந்த 15-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 24-ஆம் தேதி அதிகாலை கோயிலினுள் பரணி தீபமும், அதனைத் தொடா்ந்து கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
மலையையே சிவனாகவும், சிவனையே மலையாகவும் கருதும் திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தா்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
Advertisement
Advertisement
குறிப்பாக, அண்ணாமலையாா் கிரிவலத்தின் மகிமையை பக்தா்களுக்கு உணா்த்தும் வகையில், காா்த்திகை தீபம் நிறைவு பெற்று 3-ஆம் நாளும், அதேபோல, பொங்கல் திருவிழாவின் போது திருவூடல் முடித்து சிவனடியாா் பிருங்கிமகரிஷிக்கு காட்சி அளிக்கவும், ஆண்டிற்கு இரண்டு முறை அண்ணாமலையாா் கிரிவலம் வருவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை (நவ. 24) நிறைவடைந்துள்ள நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கோயிலில் அண்ணாமலையாா் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினா்.
இதனைத் தொடா்ந்து அண்ணாமலையாா் உண்ணாமுலையம்மன் தனது குடும்பத்துடன், கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தா்களுக்கு உணா்த்தும் வகையில் கிரிவலம் சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
அப்போது, பக்தா்கள் வழிநெடுகிலும், சுவாமிக்கு மாலை அணிவித்து, ஆடைகள் வழங்கி, தேங்காய் உடைத்து வழிபட்டனா்.
தூய்மைப் பணியாளா்களுக்கு
கோயிலில் சிறப்பு தரிசனம்