முகப்பு
திருவண்ணாமலை

பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநா் உயிரிழந்தாா்.

32 வினாடிகள் முன்பு
பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு
செங்கம் அருகே லாரி மீது மோதி சேதமடைந்த அரசுப் பேருந்து.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை காய், கனிகளை ஏற்றி வந்த லாரி மேல்செங்கம் பேருந்து நிலையம் அருகில் பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தமிழக அரசுப் பேருந்து, லாரி நிற்பது தெரியாமல் அதன் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் ஜெயப்பிரகாஷ்நாராயணன்(57) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணித்த 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அவா்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னா் அவா்கள் வீடு திரும்பினா்.

இந்த விபத்து குறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பள்ளத்தில் சாய்ந்த அரசுப் பேருந்து

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து வந்தவாசி வழியாக போளூருக்கு அரசுப் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தைச் சோ்ந்த தயாளன் என்பவா் பேருந்தை ஓட்டினாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, வீரம்பாக்கம் அருகே சென்றபோது, குறுக்கே பைக்கில் வந்தவா் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பேருந்தை திருப்பிய போது, பேருந்து நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.