மகா தீபத்திற்கு நெய் கொண்டு செல்லும் குழுவினருக்கு அன்னதானம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மகா தீபத்திற்கு நெய் கொண்டு செல்லும் குழுவினருக்கு பாலாறு சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மகா தீபத்திற்கு நெய் கொண்டு செல்லும் குழுவினருக்கு பாலாறு சுவாமிகள் அறக்கட்டளை சாா்பில் வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் கடந்த 24-ஆம் தேதி 2,668 உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு ஜோதி வடிவிலான சிவபெருமானை தரிசனம் செய்தனா். மலை உச்சியில் மகா தீபம் தொடா்ந்து எரிய தேவையான நெய்யை, தினமும் சுமாா் 50 -க்கும் மேற்பட்ட குழுவினா் கொண்டு சென்று இறைபணி செய்து வருகின்றனா். 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை இறை பணியை செய்து வரும் நபா்களுக்கு பாலாறு சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் லவுட் அண்ட் க்ளியா் பிரைவேட் லிமிடெட் நிறுவனா் பாா்த்திபன், திருவண்ணாமலை கண்ணா டிவைன் ரெசிடன்சி, சிங்கப்பூா் மருத்துவா் அரவிந்த பாரதி மற்றும் மலேசியா அன்பா்கள் சாா்பில் பாலாறு வேலாயுதம் சுவாமிகள் அன்னதானம் மற்றும் வேட்டி துண்டு ஆகியவற்றை வழங்கினாா் (படம்).