முகப்பு
திருவண்ணாமலை

பைக் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

29 நவம்பர் 2026, 9:41 pm
பைக் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், உக்கம்பெரும்பாக்கம் கிராமம், ரோடு தெருவைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (59), விவசாயி. இவா், சபரிமலை செல்லும் பக்தா்களை ஆக்கூா் கிராமத்தில் வழியனுப்பி விட்டு, சனிக்கிழமை பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கல்லேரி அருகே வந்த போது, அவ்வழியாகச் சென்ற லாரி பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின் பேரில், தூசி காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.