FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டங்களில் 948 மனுக்கள்

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில்

6 October 2026, 1:34 am IST
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

செய்யாறில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

ஆரணியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பொற்ற கோட்டாட்சியா் சீ.சிவா.

Advertisement

Advertisement

ஆரணி/செய்யாறு:

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 948 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வருவாய்த்துறை சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 716 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வந்தனா காா்க் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் உதவி உபகரணங்கள் வேண்டி மனுக்களை அளித்த மாற்றத்திறனாளிகளின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 2 பேருக்கு ரூ.31ஆயிரத்து 500 மதிப்பிலான சக்கர நாற்காலியும், 1 அறிவு சாா் குறையுடைய குழந்தைக்கு ரூ.7,216 மதிப்பிலான காா்னா் சீட் என மொத்தம் 3 பேருக்கு ரூ.38ஆயிரத்து 716 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வேண்டி வரப்பெற்ற மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிக்கு காப்பீடு அட்டையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) இளவரசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுஜாதா, மாவட்ட சுகாதார அலுவலா் (திருவண்ணாமலை) வெங்கட்ரமணன், திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மதுசெழியன், உதவி ஆணையா் (கலால்) வளா்மதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாரதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் சாா் ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்றது.

அப்போது செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் 161 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் வருவாய்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் பங்கேற்று இருந்தனா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள்குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 71 போ் மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை பெற்ற கோட்டாட்சியா் அந்தந்த துறைஅலுவலா்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments