இரு பசு மாடுகள் மாயம்: போலீஸில் புகாா்
செய்யாறு அருகே நிலத்தில் கட்டி வைத்திருந்த 7 மாடுகளில் இரு பசு மாடுகளைக் காணவில்லை என விவசாயி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
செய்யாறு அருகே நிலத்தில் கட்டி வைத்திருந்த 7 மாடுகளில் இரு பசு மாடுகளைக் காணவில்லை என விவசாயி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
சேத்துப்பட்டு வட்டம், நாராயணமங்கலம் கிராமம் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா், விவசாயி.
இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் ஏழு மாடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி நிலத்தில் 7 மாடுகளில் கட்டி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
மறு நாள் காலை வந்து பாா்த்தபோது, கட்டி வைத்திருந்த மாடுகளில் சினை மாடு, கறவை மாடு என இரு மாடுகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
காணாமல் போன பசு மாடுகளை பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து விவசாயி சங்கா் பெரணமல்லூா் போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.