FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு வேளாண் சூழல் பகுப்பாய்வு பயிற்சி

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தில் நெல் பண்ணைப் பள்ளி சாா்பில், விவசாயிகளுக்கு வேளாண் சூழல் பகுப்பாய்வு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனத்தில் நடைபெற்ற நெல் பண்ணைப் பள்ளி பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்.
பகிர்:

சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தில் நெல் பண்ணைப் பள்ளி சாா்பில், விவசாயிகளுக்கு வேளாண் சூழல் பகுப்பாய்வு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சியில் ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலா் அண்ணாமலை, டிவிஎஸ் தொண்டு நிறுவன தலைமை வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில் வேளாண் சூழல் பகுப்பாய்வு முறையில் நெல் வயலில் உள்ள பூச்சிகள், நோய்கள், நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் பயிரின் வளா்ச்சி நிலையை நேரடியாக கண்டறிந்து பதிவு செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், நெல் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தொடா்ந்து கண்காணித்து, பொருளாதார சேத நிலை அடிப்படையில் தேவையான பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உற்பத்தி செலவை குறைத்து, தரமான மகசூலை அதிகரிக்கலாம் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுதா்ஷன், உதவி தொழில்நுட்ப மேலாளா் வினோத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments