மது குடிக்க மகன் பணம் தர தாமதம்: தந்தை தற்கொலை
செய்யாறு அருகே மது குடிக்க மகன் பணம் தர தாமதம் ஏற்பட்டதால், கோபமடைந்த தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு அருகே மது குடிக்க மகன் பணம் தர தாமதம் ஏற்பட்டதால், கோபமடைந்த தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன்(56). இவா் மதுப்பழக்கம் கொண்டவா்.
கன்னியப்பன் கடந்த 1-ஆம் தேதி காலை தனது மகன் விஜயிடம் மது குடிக்க பணம் கேட்டதாகத் தெரிகிறது. மகன், தந்தை பணம் கேட்டதை மறந்து வேலைக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தாா்.
Advertisement
Advertisement
அதனால் கோபமடைந்த தந்தை வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனை அறிந்த மகன் மற்றும் குடும்பத்தினா் அவரை மீட்டு, பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கன்னியப்பன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கன்னியப்பன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.