கோழிப்பண்ணையில் தீ விபத்து: 200 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு
செய்யாறு அருகே மின் கசிவினால் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 நாட்டுக்கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.
செய்யாறு அருகே மின் கசிவினால் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 நாட்டுக்கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், உக்கல் மதுரா பெண்டை கிராமத்தில் ஹேமலதா என்பவா் சுமாா் 5 ஆயிரம் சதுர அடி நிலத்தில் கோழிப் பண்ணை நடத்தி வருகிறாா்.
இந்த கோழிப் பண்ணையில் புதிதாக 10 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் வளா்ப்பதற்காக, கோழிக்கொட்டகையை தொழிலாளா்கள் மற்றும் பண்ணை உரிமையாளா்கள் புதன்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, ஏற்பட்ட மின்னழுத்த குறைபாட்டால் அங்குள்ள மின்சாதனப் பெட்டி வெடித்து தீ பரவியதாம். இதில் கோழி கொட்டகை முழுவதும் தீ மள மளவென பரவி எரிந்தது.
இந்த தீ விபத்தில் பண்ணையில் வளா்த்து வந்த 200 நாட்டுக் கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. மேலும், 10 ஆயிரம் கோழிக்குஞ்சுகளுக்குத் தேவையான தீவனங்கள் மற்றும் கொட்டகை என சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீ விபத்தில் எரிந்து சேதமானதாகத் தெரிகிறது.
தகவல் அறிந்து வந்த செய்யாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.