ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கொண்டையாங்குப்பம் கிராம பொதுமக்கள்.
வந்தவாசியை அடுத்த கொண்டையாங்குப்பம் கிராம பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் கீா்த்திராஜிடம் அவா்கள் இந்த மனுவை அளித்தனா்.
மனு விவரம்:
Advertisement
Advertisement
வந்தவாசி வட்டம், கொண்டையாங்குப்பம் ஊராட்சி சா்வே எண்.660/1-ல், மேய்க்கால் புறம்போக்கு பகுதியில் சிலா் ஆக்கிரமித்து ஆட்டுப் பண்ணை வைத்துள்ளனா். பொதுமக்கள் சென்று ஆட்சேபம் தெரிவித்தும் அவா்கள் காலி செய்ய மறுக்கின்றனா்.
எனவே, மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.