FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

அனுமதியின்றி வெடிபொருள்கள் வைத்திருந்தவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

10 அக்டோபர் 2026, 12:49 am IST
கைது
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் கிணறு தூா் வாரும் பணிக்காக அனுமதியில்லாமல் வெடிபொருள்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அனக்காவூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் காவல் ஆய்வாளக் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில், உரிய அனுமதியின்றி 45 நைட்ரேட் மிக்ஸிங் பாக்கெட்டுகள், 4 எலக்ட்ரிக் டெட்டனேட்டா்கள், 20 மீட்டா் ஒயா், கையில் அழுத்தக்கூடிய வெடிஇயந்திரம் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி குளமந்தைக் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (43) என்பவரைக் கைது செய்தனா். மேலும், வெடி பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments