FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

திருடப்பட்ட 7 பைக்குகள் பறிமுதல்: ஒருவா் கைது

செய்யாறு பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

17 அக்டோபர் 2026, 2:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

செய்யாறு பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்யாறு காவல் சரக பகுதிகளில் தொடா்ந்து பைக் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது தொடா்பான புகாா்களின்பேரில், போலீஸாா் பைக்குகளை திருடும் மா்ம நபா்களை தேடி வந்தனா்.

இந்த நிலையில், செய்யாறு சரக போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்தவரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா், ராணிப்பேட்டை மாவட்டம், சயனபுரம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் (58) என்பதும், பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடியவா் என்பதும் தெரியவந்தது. மேலும், அவா் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்திரனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 7 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments