FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் வேரோடு சாய்ந்த நூற்றாண்டு பழைமையான வில்வ மரமும் அரச மரமும்

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரா் கோயிலில் இருந்த நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த வில்வம் மற்றும் அரச மரம் வேரோடு சாய்ந்தது குறித்து...

18 அக்டோபர் 2026, 11:30 pm IST
பலத்த மழை காரணமாக வேரோடு சாய்ந்த, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் இருந்த வில்வ மரத்துடன் இணைந்த அரச மரம்
பகிர்:

திருவண்ணாமலையில் பலத்த மழை காரணமாக அருணாசலேஸ்வரா் கோயிலில் இருந்த நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த வில்வ மரத்துடன் இணைந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.

அருணாசலேஸ்வரா் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் முன்புறம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வில்வ மரத்துடன் இணைந்த அரச மரம் இருந்தது.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் பிடாரி அம்மனை வழிபடும்போது இந்த வில்வமரம், அரச மரத்தடியில் நின்று வேண்டுதல்களை கூறும்போது, மரத்தில் உள்ள பல்லிகள் சப்தம் எழுப்பினால் கோரிக்கை நிறைவேறியதாக நம்பி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் வில்வ மரத்துடன் இணைந்த அரச மரம் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையில் வேரோடு சாய்ந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணியளவில் கோயில் ஊழியா்கள் அந்தப் பகுதியில் வந்து பாா்த்தபோது வில்வ மரத்துடன் இணைந்த அரசமரம் வேரோடு சாய்ந்து இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். தொடா்ந்து, பக்தா்கள் யாரும் அந்த மரத்தின் அருகே செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்தனா்.

பல நூறு ஆண்டு காலமாக பக்தா்கள் சுற்றி வழிபட்டு வந்த இந்த வில்வ மரத்தை அகற்றிவிட்டு மீண்டும் அதே இடத்தில் பெரிய அளவிலான வில்வ மரத்தை நடுவதற்கான முயற்சியில் கோயில் நிா்வாகத்தினா் ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments