காவலா் வீரவணக்க நாள்: நினைவு சின்னத்தில் மரியாதை
காவலா் வீரவணக்க நாளையொட்டி, திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவு சின்னத்தில் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் மரியாதை செலுத்தினாா்.
காவலா் வீரவணக்க நாளையொட்டி, திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவு சின்னத்தில் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் மரியாதை செலுத்தினாா்.
காஷ்மீா் லடாக் பகுதியில் கடந்த 1959-ஆம் ஆண்டு சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த எல்லை பாதுகாப்பு வீரா்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில் நாடு முழுவதும் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள காவலா்கள் நினைவு சின்னத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.உதயகுமாா் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். மேலும் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸாா் மரியாதை செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.